சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையை அடுத்து அமைந்த மறைமலைநகரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் முதல்‑அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூற்றாண்டு கல்வெட்டை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், கொள்கையில்லா அரசியல் செயல்பாடுகளால் கடந்த 10 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள் பாழடைந்தது என்று குறிப்பிட்டு, மக்களின் ஆதரவுடன் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டை நாங்கள் மீட்டெடுத்து வளமாக்கியுள்ளோம் என்றார். மேலும், “திராவிடத்துக்கு எதிரான பா.ஜனதாவும், திராவிடம் என்றால் என்ன தெரியாத எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவும் மீண்டும் கபளீகரம் செய்ய துடிக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப்பதிவில், “தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் — வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என்றும் தெரிவித்துள்ளார்.
