தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போது திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் என கிட்டத்தட்ட 39 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தற்போது அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல் குமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு பிறகு கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.