வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, கடலூர் மாவட்டத்தில் இன்று (நவ. 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 4 வட்டங்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், கல்லூரிகள் வழக்கம் போலச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை நீடிப்பதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.