
நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜ்குமார் கட்சியிலிருந்து விலகி சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 13 ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாக செயலாற்றி வந்த அவர், திடீரென அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக்காக உண்மையாக உழைக்க நினைப்பவர்கள் ஓரம் கட்டப்படுவதாக ராஜ்குமார் குற்றம் சாட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.