தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று நகைப்பிரியர்களுக்குச் சற்று அதிர்ச்சியூட்டும் வகையில் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
நேற்று அதிரடியாகச் சவரனுக்கு ரூ.3,200 வரை குறைந்து ரூ.1,20,000-க்கு விற்பனையான தங்கம், இன்று மீண்டும் தன் ஏறுமுகத்தைத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15,050-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை இன்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாகக் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.315-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,15,000-க்கும் விற்பனையாகிறது. இந்தத் திடீர் விலை ஏற்றம், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த இல்லத்தரசிகளையும் நடுத்தரக் குடும்பத்தினரையும் சற்று யோசிக்க வைத்துள்ளது.
