பிரபல தொழிலதிபர் லாட்டரி கிங் மாட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் லட்சிய ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியினை சமீபத்தில் தொடங்கினார். இந்த கட்சியில் அவரது தாயார் லீமா ரோஸ் இணைந்த நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் தன்னால் கட்சிப் பணிகளை செய்ய முடியவில்லை என்றும் அதில் தனக்கு இடையூறுகள் ஏற்படுகிறது என்று கூறி லீமாரோஸ் அதிரடியாக கட்சியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவர் அதிமுகவில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக்கொண்டார். மேலும் இவர்களது மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
