நெல்லை: நெல்லையில் வந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்றவர்களுக்கும் அதிமுக ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் சிலர் கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவித்த போது, அதிமுகவினர் கல்வீசி தாக்கினர். இதனால் இருபுறமும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் தலையீடு செய்து இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தினர். பரபரப்பு சூழ்நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
