மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறவிருந்த தவெக மாநாட்டின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 27ஆம் தேதி வருவதால், பாதுகாப்பு பணிகளில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனையடுத்து, மாநாட்டிற்கான போலீஸ் அனுமதி வழங்கப்படவில்லை. இன்று மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், மாநாடு நடைபெறும் புதிய தேதி ஆகஸ்ட் 18 முதல் 22க்குள் ஏதேனும் ஒரு நாளாக இருக்கும் என தெரிவித்தார். புதிய தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
