தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தொழிலாளர் மற்றும் அவர்களின் மகன்-மகள் திருமண உதவித்தொகையும் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் வாயிலாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.