அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், சில மணி நேரங்களிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிலோபர் கபில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். ஏற்கனவே அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த நிலையில், தற்போது சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சரான நிலோபர் கபிலும் திமுகவில் இணைந்திருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அதிமுகவிலிருந்து தொடர்ந்து பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகி வருவது தேர்தல் நேரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
