பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவில் வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது, மகளிர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் வரலாம் வராமலும் போகலாம். மாநாட்டு பிரசுரத்தில் அன்புமணி பெயர் மற்றும் படம் வரும், வரலாம் எனக் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் அவரது இருக்கைக்கு அருகே ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்ததாக கூறினார். சென்னை சேர்ந்த தனியார் துப்புரவு நிறுவன அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர்.
இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, இன்னும் இரண்டு நாட்களில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தது யார் என்ற உண்மை தெரியவரும் என கூறியுள்ளார்.
