தமிழகத்தில் நடைபெறவுள்ள அடுத்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) ஆட்சிதான் தமிழ்நாட்டில் அமையும் என்று பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, “கூட்டணி ஆட்சி என்பது எளிதாக கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல; அமித்ஷா மூன்று முறை தெளிவாக கூட்டணி ஆட்சி என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்ன கருத்தையே ஒரு தொண்டனாக நான் ஏற்க வேண்டும்.
“எனது தலைவர் சொன்னதை மறுத்து பேசினால், என்னால் பாஜகவில் தொண்டனாகவே இருக்க முடியாது” எனவும் அண்ணாமலை தெளிவாக கூறியுள்ளார். அதிமுகவிற்கு இதுகுறித்து மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவுடன் நேரில் பேசி முடிவெடுக்கட்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும் “இந்த கூட்டணியை உருவாக்கியதில் எனக்கு பங்கு இல்லை. பேச்சுவார்த்தைகளிலும் நான் இருப்பது இல்லை. எனது தலைவர்களின் பேச்சையே நம்பி அதை வலுவூட்டவேண்டும் என்பதே என் கடமையாகும். கூட்டணி ஆட்சி இல்லை என்று நான் சொன்னால், பாஜகவில் தொண்டனாக இருப்பதற்கே எனக்கு தகுதி இருக்காது” எனக் கூறியுள்ளார்.
