இந்தியாவில் வழக்கத்தை விட இந்த வருடம் முன்னதவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அதேசமயம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகும் பல மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களை வாட்டி எடுத்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய மாநில ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி இனி வெயிலின் தாக்கம் குறையும். இதன் காரணமாக ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, அரியானா மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.