அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், I.N.D.I.A. கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் நீண்டநாள் சஸ்பென்ஸ் நிலவியது.
தமிழகத்தை சேர்ந்த திருச்சி சிவா, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. குறிப்பாக NDA சார்பில் தமிழரான சி.பி.ஆர் போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிராக தமிழகத்திலிருந்தே ஒருவர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீர் மாற்றமாக, மல்லிகார்ஜுன் கார்கே, தெலங்கானாவை சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி I.N.D.I.A. கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.
தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டவியல் துறையில் பெரும் மரியாதையை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் NDA – I.N.D.I.A. கூட்டணிகளுக்கிடையில் கடுமையான போட்டி நிலவ வாய்ப்பு அதிகம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
