சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சி தலைவர் கமலஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, என்னை அரசியலுக்கு வர வைப்பது கடினம் என்றார்கள். இப்போது நான் அரசியலுக்கு வந்து விட்டேன். என்னை வெளியேற்றுவது என்பது அதைவிட கடினம். எதிரிப்படையை நடத்துவது போல விவசாயிகளை மத்திய அரசு நடத்துகிறது.

90 ஆயிரம் பேர் ஓட்டு போடாததால் நான் கோவையில் தோற்றேன். நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் அரசியலுக்கு வந்தவன். முழு நேர குடிமகனாக இல்லாமல் ஓட்டுக்கூட போடாதவர்கள் என்னை முழு நேர அரசியல்வாதியாய் என கேட்காதீர்கள். முழு நேர குடிமகன்கள் கூட யாரும் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.