பாரத்மாலா, சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட 7 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது CAG அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது என மத்திய பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இப்படி ஆட்சி செய்து கொண்டு, ஊழல் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி உள்ளது. எங்கே சென்றாலும் திமுக ஆட்சியை பிரதமர் கொச்சைப்படுத்தி வருகிறார். பாஜகவுக்கு விரைவில் தக்க பாடம் கற்பிக்கப்படும் என கொந்தளித்தார்.