சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,20,080 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15010 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 16375 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,31,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு பத்து ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.