சமூக வலைதளங்களில் அண்மையில் ஒரு வீடியோ காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலைநாட்டு உடையில் பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் அந்த வீடியோவில் இருப்பது தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி சிலர் திட்டமிட்டுப் பரப்பினர். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் உண்மையான பெண் தற்போது மௌனம் கலைத்துள்ளார். “அது நான்தான், அமைச்சர் இல்லை…” என்று அவர் மிகவும் உருக்கமாக விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படும் அந்த வீடியோவில் இருப்பது அமைச்சர் கீர்த்தனா அல்ல, அது நான்தான் என்று அந்தப் பெண் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். தேவையற்ற அரசியல் காரணங்களுக்காகத் தனது தனிப்பட்ட வீடியோவை எடுத்து, அதனைத் தவறான தகவல்களுடன் சோஷியல் மீடியாவில் பரப்பி வருவதைப் பார்த்து தான் கடும் மனவேதனை அடைந்ததாக அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
View this post on Instagram
தனக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், தன் முகத்தையோ அல்லது வீடியோவையோ பயன்படுத்தி வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் லாபத்திற்காக ஒரு சாதாரணப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் கைவைப்பதும், அவதூறு பரப்புவதும் எந்தளவுக்கு வேதனை அளிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
