மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், பக்தி பார்க் – மைசூர் காலனி இடையே சென்ற மோனோ ரயில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாலத்தின் நடுவில் நின்றுவிட்டது. இதில் பயணிகள் பல மணி நேரம் சிக்கித் தவிக்க நேர்ந்தது. உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் பராமரிப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.
ஜன்னல் கண்ணாடிகளை வெட்டி பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து MMMOCL அறிக்கை வெளியிட்டு, “பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமை. விரைவில் சேவைகள் சீராகும்” என்று தெரிவித்தது.
#WATCH | Mumbai Monorail stuck on elevated track due to power supply issue amid heavy rain; rescue underway.#ViralVideo #Trending #monorail pic.twitter.com/6vjfiKHH6o
— TIMES NOW (@TimesNow) August 19, 2025
“>
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மும்பையில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 300 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி, புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மோனோ ரயில் சிக்கியதால் பயணிகள் பெரும் சிரமத்தில் சிக்கினர். மேலும், கனமழை காரணமாக நான்டெட்டில் மட்டும் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
