செங்கம் அருகே புதுப்பாளையத்தில் தேர்தல் பரப்புரைக்குச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (EPS) மிகப்பெரிய விபத்திலிருந்து நூலிழையில் தப்பினார். அவரை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கட்-எவுட் திடீரென சரிந்து விழுந்தது. அதற்குச் சில வினாடிகள் முன்பே EPS பயணித்த கார் அந்தப் பகுதியில் இருந்து கடந்து சென்றதாக காட்சிகள் தெரிவிக்கின்றன. சம்பவக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, அச்சம் கலந்த பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆனால் பின்னால் வந்த இரண்டு கார்கள் மீது கட்-எவுட் சரிந்து விழுந்ததால், அதில் இருந்த மூவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து போக்குவரத்தை சீராக்கினர்; கட்-எவுட் பொருத்துதலில் குறைபாடா, திடீர் காற்றடிப்பா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
#WATCH | திருவண்ணாமலையில் தேர்தல் சுற்றுப் பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமியின் பேருந்து கடந்து சென்ற அடுத்த நொடியே அதிமுக பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு#SunNews | #EdappadiPalanisamy | #Thiruvannamalai pic.twitter.com/1krAfmtlnl
— Sun News (@sunnewstamil) August 16, 2025
“>
