வங்கக்கடலில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் தாக்கம் காரணமாக,  மேற்கு தமிழக மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 17) கனமழை சாத்தியம் நிலவுவதால், ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக நீலகிரிக்கு மக்கள் அதிக அளவில் புறப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, மக்கள் தேவை இல்லாத பயணங்களை தவிர்க்க வேண்டுமெனவும், ஏற்கனவே பயணத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ள வேண்டுமெனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.