சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் குறைந்து ஒரு சவரன் 72800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9927 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79416 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 124 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 124000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
