அதிமுக கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலால் வேட்பாளர் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.