தமிழகத்தில் ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் மற்றும் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று,ஜாதி சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.