சேலம் சீலநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய விளக்கம் அளித்தார். “யார் தற்போது ஆட்சியில் இருக்கிறார்களோ மற்றும் யாரை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டுமோ, அவர்களைத் தான் விமர்சிக்க முடியும்; அதுவே முறையான அரசியலும் கூட.

ஏற்கனவே மக்களால் தேர்தல் களத்தில் நிராகரிக்கப்பட்டவர்களை (அதிமுக) நாம் ஏன் மீண்டும் எதிர்க்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். தேர்தல் களத்தில் தவெக-வின் முதன்மை எதிரி ஆளுங்கட்சியான திமுக தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த அவரது இந்த உரை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விஜயா இல்ல ஸ்டாலின் சாரா யாரை நம்புறீங்க என கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி கேள்வி எழுப்பிய நடிகர் விஜய் நடைமுறைக்கு சாத்தியமாகாத அறிவிப்புகளை வெளியிட மாட்டேன் எனவும் தேர்தல் அறிக்கை விரைவில் வெளிவரும் என்றும் கூறினார். மேலும் 2000 ரூபாய் மற்றும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் பணத்தை வாங்கிவிட்டு அவர்களின் காதில் விசில் ஊதி அனுப்பி வையுங்கள் கண்டிப்பாக நம்ம ஓட்டை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று சூளுரைத்தார்.