பிரபல நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான துல்கர் சல்மானின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இன்று (அக்.08) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அதற்குப் பின்னர், அவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் 6 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரபரப்பு சம்பவம் திரையுலகத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
