விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளே போட்டியாளர்களின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி வேகமாக துவங்கியுள்ள நிலையில், இன்ஸ்டாவில் ‘பலூன் அக்கா’ என பிரபலமான அரோரா சின்கிளேர் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அரோராவை 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல், அரோராவை 1,892 பேர் மாதம் ரூ.390 செலுத்தி சப்ஸ்கிரைப் செய்து வருகிறார்கள். இந்த சப்ஸ்கிரைப் மூலம் அவர்களுக்கு மட்டும் சிறப்பான புகைப்படங்கள், கியூட் வீடியோக்கள், போட்டோஷூட் கிளிப்கள் போன்றவை தனிப்பட்ட முறையில் பகிரப்பட்டு வந்துள்ளன.

இதன்மூலம் மாதம் சுமார் 7 லட்சம் வரை வருமானம் சம்பாதித்து வந்த அரோரா, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவே, அவரது இன்ஸ்டா கணக்கு எந்த பதிவும் இல்லாததால் சப்ஸ்க்ரைபர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் “ரூ.390 போச்சா?” என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். “பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன் சப்ஸ்க்ரைப் பணத்தை ரீபேக் பண்ணலாம்னு யோசிக்கலானா?” என மீம்கள் உருவாகி வைரலாகி வருகின்றன.