நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது முன்பு உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. அதில், சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து இன்று (அக்.8) சீமான் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், “நடிகை விஜயலட்சுமியைப் பற்றிய எந்தவிதமான கருத்தையும் இனி ஊடகங்களில் அல்லது பொதுமக்கள் முன்பாக கூறமாட்டேன்” என்று உறுதியளித்துள்ளார்.