புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே அரசு பேருந்தும், ஜல்லிக்கட்டு காளை ஏற்றி சென்ற வேனும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், வேனில் இருந்த மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் படுகாயம் அடைந்துள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.