தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அரசு என்னதான் உத்தரவுகளை பிறப்பித்தாலும் சில ஆம்னி பேருந்துகள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதனால் பொதுமக்களும் அதிக அளவு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து நெல்லை செல்ல 1500 ரூபாயாக வசூலிக்கப்பட்ட வந்த கட்டணம் தற்போது 3800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் அதிகளவு செல்ல உள்ள நிலையில் தற்போது ஆம்னி பேருந்து கட்டணம் கிடு கிடுவென உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல வழித்தடங்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.