பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசாங்கம் 1000 ரூபாய் உட்பட பொருட்கள் வழங்கியிருந்த நிலையில், கரும்பு வழங்காமல் இருந்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தன.

இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகி முதல்வர் ஸ்டாலின் பொங்கலுக்கு கரும்பு வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார் என்று கூறியதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.