நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில் காலமாகும் பட்சத்தில் அந்த தொகுதியை அதிகாரப்பூர்வமாக காலியானது என அறிவிப்பது மக்களவை செயலகத்தின் கடமையாகும்.