சிரியாவில் உள்ள முக்கிய நகரங்களை துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தலைநகர் டமாஸ்கஸூக்குள் நுழைந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளனர். அதாவது பஷார்-அல்-ஆஷாத் தலைமையிலான அரசை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டை விட்டு அதிபர் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் அவருடைய விமானமும் மாயமானதாக கூறப்படுகிறது. தலைநகரின் எல்லைப் பகுதியில் உள்ள பஷார் அல் ஆஷாத் தந்தை சிலையையும் கிளர்ச்சியாளர்கள் உடைத்து விட்டனர். மேலும் இதனால் சிரியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஊடகங்கள் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓட வில்லை என்று கூறுகிறார்கள். இதனால் அந்த நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.