தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய நாட்களின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இன்று நீலகிரி மாவட்டத்திற்கும் நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

இன்று ஜனவரி நான்காம் தேதி ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திலும் நாளை ஜனவரி 5ஆம் தேதி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.