தெலங்கானாவின் ஹைதராபாத்தில் அதிர்ச்சி தரும் கொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மனைவி சிட்டி, தனது காதலனான ஹரீஷுடன் சேர்ந்து, கணவர் ஜெலேலா சேகரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, முதலில் தூக்க மாத்திரை கொடுத்து உறங்க வைத்து, பின்னர் கழுத்தை நெறித்து, தலையில் கம்பு வைத்து தாக்கி கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொலையை மாரடைப்பு போல் காட்ட முயற்சித்த சிட்டி, பின்னர் காவல்துறையின் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். தற்போது சிட்டி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காதலன் ஹரீஷ் தலைமறைவாக உள்ளார்.
ஜெலேலா சேகர், ஹைதராபாத்தின் சரூர்நகர் பகுதியில் மனைவி சிட்டியுடன் வசித்து வந்தார். 16 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சேகர், கேப் டிரைவராக வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். அவர் நீண்ட தூர பயணங்களுக்கு செல்லும்போது, சிட்டிக்கும் ஹரீஷுக்கும் இடையே காதல் தொடங்கியது.
இதை அறிந்த சேகர், மனைவியை கண்டித்ததால், இருவரும் அவரை திட்டமிட்டு கொலை செய்தனர். காவல்துறை விசாரணையில், சிட்டி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது ஹரீஷை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் நடத்தி வருகிறது.
