உத்தரப் பிரதேச மாநிலம், காண்ப்பூரில் (Kanpur), ஒரு பெண்ணுடன் ‘லிவ்-இன்’ (Live-in) உறவில் வாழ்ந்து வந்த அவரது காதலன், அப்பெண்ணின் 13 வயது மகளைப் பாலியல் வன்புணர்வு (Rape) செய்த கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறுமியின் தாய் வேலைக்குச் செல்லும் நேரங்களில் இந்தக் காதலன் அந்த பெண்ணின் மகளைக் கட்டாயப்படுத்தி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
தென் டெல்லியைச் சேர்ந்த அப்பெண், 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவனைப் பிரிந்த பிறகு, தனது மகளுடன் காண்ப்பூரின் ஜாஜமௌ பகுதியில் வாடகைக்குக் குடியேறி, கூலி வேலை செய்து வந்துள்ளார்.
அப்போதுதான் அஜித் என்ற பேல்பூரி வியாபாரியைச் சந்தித்து லிவ்-இன் உறவைத் தொடங்கியுள்ளார். இந்த அஜித், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகத் தன்னை மிரட்டிப் பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாகச் சிறுமி தைரியமாகத் தன் தாயிடம் தெரிவித்துள்ளார்.
வெளியில் சொன்னால் தாயையும் மகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். தாயின் புகாரின் பேரில் அஜித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
