நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய பத்திரிக்கையாளர் செந்தில், பாஜகவுடன் கூட்டணிக்கு அக்ரீமெண்ட் ADMK நீங்கள் போட்டீங்களா..?  குறைந்தபட்ச செயல்திட்டம் போட்டிங்களா..?  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வாஜ்பாய்யோடு கூட்டணி வைத்த காலகட்டத்திலும் பாஜகவின் கொள்கைகளை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவின் கொள்கைகளை பாஜகவை ஏற்றுக் கொள்ள வைத்தார். ஒரு குறைந்தபட்ச செயல் திட்டம் தீட்டினார்.

தமிழ்நாட்டில் இருந்து ஒரு தலைவர் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கப்படக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டார். தமிழ்நாட்டுக்கு மட்டும் பேசியது  அல்ல திராவிட முன்னேற்றக் கழகம்.  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிடக்கூடாது என்று குறைந்தபட்ச செயல்திட்டம் போட்டு,  கையெழுத்து வாங்கிட்டு கூட்டணியில் சேர்த்தாங்க. இருமொழி கொள்கை தான் கையெழுத்து போடு. பொது சிவில் சட்டத்தை பற்றி பேசக்கூடாது கையெழுத்து போடு.

எடப்பாடி பழனிசாமி அவர்களே… நீங்கள் அப்படி ஏதாவது பாஜகவுடன் ஒப்பந்தம் போட்டு உள்ளீர்களா? நீங்க ஓட்டு போடலைன்னா…  சிஐஏ சட்டம் நிறைவேறி இருக்குமா?  நீங்க ஆதரிச்சு ஓட்டு போடலைன்னா… வேளாண்   சட்ட திருத்த மசோதா நிறைவேறி இருக்குமா ? ஏன் உங்களுடைய… மறைந்த முன்னாள் முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மையார் செல்வி ஜெயலலிதா ஆட்சியில் இருக்கின்ற வரை கூட இங்க நீட் இல்லையே…

அதன் பிறகு தானே நீட். அப்போ எல்லா தப்பையும் நீங்க பண்ணிட்டு,  உங்க ஆட்சி காலத்தில் வருமானவரித்துறைக்கு பயந்து…  அமலாக்கத் துறைக்கு பயந்து… சிபிஐக்கு பயந்து…. நீங்கள் நீட்டுக்கு அனுமதி கொடுத்தீர்கள். உதை மின் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தீர்கள். இன்னும் தமிழ்நாட்டிற்கு என்னென்ன கேடெல்லாம் உண்டோ எல்லாம் கேட்டையும் நீங்கள் அனுமதித்து விட்டு,  இன்று களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கின்ற…

சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கக் கூடிய….  அறவழிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய…   மக்கள் களத்தில் வந்து நின்று மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை நோக்கியும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கியும் கேள்வி எழுப்புகிறீர்களே உங்களுக்கு துளியும் மனசாட்சி இருக்கிறதா ? இல்லையா ? என கேள்வி எழுப்பினார்.