தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்துத்துவா என்பது பிஜேபி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்கபரிவார்கள், விஷ்வ ஹிந்துபரிஷத், பஜ்ரங்தள்   போன்ற அமைப்புகள் கையில் எடுத்திருக்கின்ற அரசியல் செயல் திட்டத்திற்கு பெயர்தான் ”ஹிந்துத்துவா” அவ வச்சிருக்கற பெயர் அது. நான் வைக்கவில்லை. அவன் வைத்திருக்கிற பெயர் ஹிந்துத்துவா என்று அவன் பெயர் வைத்திருக்கிறான்.

அதற்கு என்ன அடிப்படை என்றால் ? முஸ்லிம் வெறுப்பு, கிறிஸ்துவ வெறுப்பு என்பதுதான் அடிப்படை. அவனுக்கு ஒரு இறுதி இலக்கு இருக்கிறது. என்ன இறுதி இலக்கு என்றால் ? பலரும் வெளிப்படையாக அறிந்த ஒன்று.  அவன் வெளிப்படையாக சொல்லாத இன்னொன்று இருக்குது. வெளிப்படையாக சொல்வது இந்த தேசத்தின் பெயரை இந்துராஷ்டிரம் என மாற்றுவது.

அவன் வெளிப்படையாக சொல்லாத ஒன்று..  புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்து அளித்த அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிவது. இதுதான் இந்துத்துவா. இதுதான் இந்துத்துவா. இதைப் புரிந்து கொள்வதில் தான் தோழர்களே நம்முடைய அரசியல் வெற்றி அடங்கியிருக்கிறது. இதைப்பற்றி கவலைப்படாதவர்கள் தான் சங்பரிவார்களோடு கைகோர்த்துக்கொண்டு,

கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் மிகவும் ஆபத்தான கொள்கைகளைக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் ஆர்.எஸ்.எஸ்,  பிஜேபி என தெரிவித்தார். திருமாவளவன் விமர்சனம் பாஜகவோடு தமிழத்தில் கூட்டணி  வைத்துள்ள அதிமுகவை சீண்டி உள்ளதாக அதிமுகவினர் முணுமுத்து வருகின்றனர்.