பாஜகவின் நிர்வாகியான தினேஷ் ரோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனுக்கும் ஒரு தன்மானம் இருக்கிறது அதை சீண்டிப் பார்த்தால் சீறிவிடுவோம். தலைவர் அண்ணாமலை அவர்களின் நேர்மையை கொச்சைப்படுத்த தமிழகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிகளுக்கும் தகுதி இல்லை.

தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி இல்லாமல் இனி எந்த கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது. ஊழல்வாதிகளை தோளில் சுமக்க பாஜகவுக்கு அவசியமில்லை. யார் கூட்டணிக்கு வந்தாலும் வராவிட்டாலும் 2026 இல் தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்.