தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, துரைமுருகன் அண்ண பத்து தடவைக்கு மேலாக எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். ஒவ்வொரு தடவையும் கணக்கு காட்டட்டும். எனக்கு இவ்வளவு சம்பளம் வந்துச்சுப்பா,  இவ்வளவு வாங்கினேன்.  எப்படி என் பையன் இவ்வளவு திடீர்னு சம்பாதிச்சான்னு எனக்கு தெரியல ? சொல்லட்டும். மு.க ஸ்டாலின் உடைய வீடு 120 கோடி ரூபாய்க்கு எப்படி சென்னையில் வந்திருக்குன்னு  கேட்போம்.

சி.ஐ.டி காலனியில், கோபாலபுரத்தில்…  120 கோடி வீட்டின் மதிப்பு எப்படி ? கேட்க வேண்டும். கேட்க வேண்டிய நேரம். ஆனால் இத்தனை நாளா….  அதை அப்படியே பேசாம இருந்தோம், வேண்டாம் என்று…  அதனால் தமிழகம் தான் இந்தியாவிலேயே ஊழல்ல நம்பர் ஒன் மாநிலமாக மாறி இருக்கிறது. ஊழல் மட்டும் இல்லை என்றால்,  இந்த மாநிலம் எங்க போகும் ?  இன்னைக்கும் NO 1 போறாங்க அப்படின்னா…  30 சதவீதம் கமிஷன் இல்லாமல்,  யாருக்கும் எந்த வேலையும் நடக்காது.

தமிழகத்திற்கு ஒரு சாராய அமைச்சர் இருக்காரு. கரூரை சார்ந்த செந்தில் பாலாஜி அவர்கள். இன்னைக்கு சுப்ரீம் கோர்ட்ல ஒரு கேஸ் நடந்துகிட்டு இருக்கு.ED சம்மந்தப்பட்ட 5,6   கேஸ். அதில் ஆஜராக கூடிய சீனியர் வக்கீலுக்கு ஒரு சீட்டிங்கு 25 லட்சம் ரூபாய். பணம் எங்கிருந்து வந்தது ? அதை கணக்கு காட்டுங்க. இதுவரை எத்தனை சீட்டிங் நடந்திருக்கு ? கரூரில் வாங்கி போட்ட 650 ஏக்கர் டாக்குமெண்டையும் வெளியிடுறோம். இதை அனைத்தையும் கேட்க வேண்டிய நேரம் இது. அதனால் நீங்கள் எங்கள் உடன் இருக்கணும் என தெரிவித்தார்.