பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்,.9 ஆம் தேதி துவங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த  நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது 9 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 83 நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்நிலையில் நேற்று வெளியான முதல் புரோமோவில் இந்த வார தலைவருக்கான போட்டியில் அசீம் மற்றும் ஏடிகே பங்கேற்கின்றனர். அப்போது அசீம் உங்களைவிட எனக்கு கோபம் குறைவு என ஏடிகே கூறுகிறார். அதற்கு அசீம் கோபக்காரன் என்று பெயர் வாங்குனா கூட எனக்கு பரவாயில்லை என சொல்லுகிறார். இந்த புரோமோ வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.