தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டதாக திமுக பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகள் மற்றும் துறைகள் மாற்றப்பட்ட நிலையில் 3 அமைச்சர்கள் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அமைச்சர் செஞ்சி மஸ்தான், கா. ராமச்சந்திரன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக புதிதாக கோவி செழியன், ஆர் ராஜேந்திரன் மற்றும் சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.