பொதுவாக அசைவத்தில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடியது சிக்கன். அது மட்டுமில்லாமல் இது விலை மலிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. சிக்கன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். புரதம் நம்முடைய உடம்பிற்கு எவ்வளவு அவசியமான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அப்படிப்பட்ட இந்த புரதத்திற்கு பெயர் போனதுதான் இந்த சிக்கன் 100. கிராம் சிக்கனில் 31 கிராம் புரோட்டின் அதாவது புரதம் உள்ளதால் சிக்கன் புரதத்திற்கான உணவுகளில் சிறந்த ஒன்றாகும். கண்புரை மற்றும் தோல் பிரச்சனைகளை தடுக்க சிக்கனில் உள்ள பி வைட்டமின்கள் உதவுகிறது.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பலவீனத்தை நீக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். ஒற்றைத் தலைவலி, இதய கோளாறுகள், நரைமுடி, அதிக கொழுப்பு மற்றும் நீரழிவு நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. எலும்பு வலுப்பெற சிக்கன் உதவியாக இருக்கும். ஏனென்றால் சிக்கனில் உள்ள வைட்டமின் டி, கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது. வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தும் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் ஹீமோகுளோபின் உருவாக்க உதவும்.

மேலும் தசை செயல்பாடு, ரத்த சோகை போன்றவற்றை அகற்ற உதவுகிறது. எடையை குறைப்பதில் அதிக அளவு புரோட்டின் கொண்ட உணவுகள் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் சிக்கனும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிக்கன் தவறாமல் சாப்பிட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க எடை கட்டுப்பாடு காணப்பட்டதாக ஆய்வுகள் மற்றும் சோதனைகள் தெரிவிக்கின்றன.

இதற்கு சிக்கனில் உள்ள அதிக புரோட்டின்களின் உள்ளடக்கம் மற்றும் குறைந்த கலோரிகள் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சிக்கன் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சிக்கனை சூடு படுத்தாமல் குறைவான அளவு சமைத்து போதுமான அளவு சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடியுங்கள்.