தற்போது திருமணக் காலம் என்பதால், சமூக வலைதளங்களில் திருமண நிகழ்வு தொடர்பான பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அப்படி ஒரு வீடியோதான் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், திருமண ஊர்வலத்தின்போது மேடையில் நின்றிருந்த மணமகன் ஒருவர், திடீரென அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வில்லைத் தூக்கி, சீதையை மணப்பதற்காக ராமர் வில்லை உடைத்ததுபோலவே உடைத்துள்ளார்.

ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தது எனக் கூறப்படும் இந்த வீடியோவில், மணமகன் மேடைக்கு வந்து, வில்லை இரு கைகளாலும் பிடித்து, பலமாகத் தள்ளி உடைப்பதும், அதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைவதும், சிலர் கைதட்டுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ @ChapraZila என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்டு, இதுவரை 2.94 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மணமகன் வில் உடைத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விரைவாகப் பரவியதுடன், பலரின் சுவாரசியமான எதிர்வினைகளையும் பெற்றுள்ளது. ஒரு பயனர், “இன்று ராமர் பூமியில் இருந்திருந்தால், இவரை ராவணனாகக் கருதி அழித்திருப்பார்” என்று நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “மற்ற போட்டியாளர்கள் எங்கே? வில் உடைக்க அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலர், மணமகன் வில் உடைக்கத் சிரமப்பட்டது போலத் தெரிவதாகவும், வில் மிகவும் பலவீனமாக  இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். மற்றோர் பயனர், ‘பரசுராமர் எங்கே?’ என்று கேலியாகக் கேட்க, இன்னொருவர், “14 வருட வனவாசத்துக்குத் தயாராக இருங்கள்” என்றும் கமெண்ட் செய்துள்ளனர். இந்த வீடியோவுக்குப் பலரும் ‘இது என்ன கேலிக்கூத்து’ என்று வேடிக்கையாகத் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.