சமூக வலைதளங்களில் லைக்ஸ் வாங்குவதற்காகவும், கவனக்குறைவாகவும் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான காரியங்கள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், பார்ப்பவர்களை உறைய வைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரயில்வே தண்டவாளத்தை ஒரு நபர் சாதாரணமாகக் கடக்க முயன்றபோது, மின்னல் வேகத்தில் வந்த ஒரு ரயில் அவர் மீது பலமாக மோதியுள்ளது. ரயில் வருவதை அவர் கவனிக்கவில்லையா அல்லது தூரம் சரியாகத் தெரியவில்லையா எனத் தெரியவில்லை,

ஆனால் அந்த மோதிய வேகத்தில் அந்த நபர் ஒரு பொம்மையைப் போல காற்றில் தூக்கி வீசப்பட்டு தூரத்தில் போய் விழுந்தார். இந்த கோரமான விபத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து, படுகாயமடைந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

“தண்டவாளத்தைக் கடக்கும்போது ஒரு நிமிடம் நில்லுங்க பாஸ்.. உயிரு முக்கியம்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு நொடி கவனக்குறைவு எப்படி மரண வாசலுக்கே கொண்டு செல்லும் என்பதற்கு இந்த சிசிடிவி காட்சி ஒரு பயங்கரமான சாட்சியாக மாறியுள்ளது.