சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வினோதமான வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக இளைஞர்கள் பைக்கில் ‘ட்ரிப்ளிங்’ செல்வதை நாம் பார்த்திருப்போம், ஆனால் இங்கே ஒரு பைக்கில் இரண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஒரு லங்கூர் குரங்கும் மிக சாதாரணமாகப் பயணம் செய்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேகமாகச் செல்லும் பைக்கின் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் அந்த லங்கூர், துளி கூட பயப்படாமல் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி ஜாலியாகச் செல்கிறது. தனக்கு முன்னால் இருக்கும் இளைஞரை இறுகப் பற்றிக்கொண்டு, மனிதர்களைப் போலவே மிக ஒழுங்காக அமர்ந்து அது பயணம் செய்யும் விதம் காண்போரை வியக்க வைக்கிறது.

இந்தப் பின்னணியில் காரில் வந்தவர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு சாகசம் ஒளிந்திருக்கும்” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “என்னப்பா இது.. லங்கூர் குரங்குக்கு இவ்வளவு தெளிவா பைக்ல உட்காரத் தெரியுதே!” என்றும், “இதுதான் உண்மையான நட்பு” என்றும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.