இந்தியா என்றாலே திறமைகளுக்கும், விசித்திரமான கண்டுபிடிப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பதற்குச் சான்றாக தற்போது ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
பொதுவாக பைக்குகளில் பின்னால் அமர்ந்து செல்வது சிலருக்குக் கஷ்டமாக இருக்கும், ஆனால் இந்த இளைஞர் செய்த வேலையைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள். தனது பைக்கின் பின் இருக்கையை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு மென்மையான, சொகுசான நாற்காலியை (Comfortable Chair) அப்படியே வெல்டிங் செய்து இணைத்துள்ளார்.
अमेरिका भी कहेगा यह आरामदायक सीट है 😂🤣🔥👇 pic.twitter.com/LbFsH1eew7
— Toofan Ojha (@RealTofanOjha) February 10, 2026
அதில் ஒருவர் ராஜாவைப் போல சொகுசாக அமர்ந்து செல்ல, இன்னொருவர் பைக்கை ஓட்டிச் செல்கிறார். “என்னதான் விலையுயர்ந்த கார் வச்சிருந்தாலும், நம்ம ஊரு ஐடியா மாதிரி வருமா?” என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை வியந்து பாராட்டி வருகின்றனர். “யார்டா நீ.. எங்கேயோ இருக்க வேண்டியவன் இங்க இருக்க” என கமெண்டுகள் குவிய, இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது.
