ஆந்திர மாநிலத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கோண சீமா மாவட்டத்தில் மண்ட பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கீதா ரத்தினம். இவர் சம்பவ நாளன்று ஹைதராபாத் செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளார். கீதா தனது கையில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பையில் வைத்துக் கொண்டு சென்றுள்ளார். பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். இந்த நிலையில் ஓட்டுநர் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் இடைவேளைக்காக நிறுத்தியுள்ளார். பேருந்து நர்கட் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டீக்கடையின் முன்பு நிறுத்தப்பட்டது. பேருந்தில் உள்ள பயணிகள் அனைவரும் டீ குடிப்பதற்காக சென்று உள்ளனர்

கீதாவும் கையில் உள்ள பையை மறந்து இருக்கையிலே வைத்துவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது பையை காணவில்லை. இதனால் பதறி அடித்த கீதா ஓட்டுனரிடம் தகவல் கொடுத்தார். ஓட்டுநர் அருகில் இருந்த அப்துல்லாபூர் காவல் நிலையத்தில் பேருந்தை கொண்டு சென்றார். அங்கு காவல்துறையினர் பயணிகள் அனைவரின் பைகளையும் சோதனை செய்தனர். இருந்தும் நகைகள் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு பதிவு செய்து காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 15 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடு போன சம்பவம் பயணிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.