ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாம்பார் ஏரிக்கரையில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் காலநிலை மாற்றங்களுக்காக வருவதுண்டு. அதன்படி இந்த ஆண்டும் சாம்பார் ஏரிக்கரையை சுற்றி பல்வேறு வினோதமான வெளிநாட்டு பறவைகள் வந்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியிலிருந்து இந்தப் பறவைகள் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணத்தை வன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை 520 பறவைகள் இறந்துள்ளதாக வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இறந்த பறவைகள் உடலில் சோதனை நடத்திய ஆய்வில் அதிகாரிகள் கூறியதாவது, பறவைகள் அனைத்தும் “கிளோஸ்ட்ரிடியம் போட்லினம்”புதிய வகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா பாதித்த பறவைகள் இறகுகள், கால்கள் செயலற்று உயிரிழக்கின்றன. பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாக்டீரியா குறித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் என வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.