தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஃபர்கானா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மான்ஸ்டர் மற்றும் ஒரு நாள் கூத்து போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பர்கானா திரைப்படம் அண்மையில் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இருப்பினும் பர்கானா திரைப்படத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக சென்னை தி. நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.